Country bomb - 2026

நெல்லை: புதிய பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்!

சற்றுமுன் உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் நெல்லை
Country bomb - 2026

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது.

இதுகுறித்து பேருந்து நிலைய அதிகாரிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பேருந்து நிலையத்தின் கீழ் தளத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுவரில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட உள்ளதை அறிந்த அவர்கள் தடயங்களை சேகரித்ததுடன் அருகே கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இரவு நேரம் என்பதால் பயணிகள் யாரும் அங்கு இல்லை என்றும் அங்கு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

புதிதாக கட்டப்பட்டு பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.