IMG 20220419 WA0058 - 2026

நின்ற லாரி பின்புறம் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து பலி-2 படுகாயம்-13

சற்றுமுன்


அருப்புக்கோட்டையில் இன்று நின்றிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதியது பேருந்தின் பின்னால் வந்த காரும் பேருந்தில் மோதியது அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துகளில் பஸ்ஸில் பயணம் செய்த இருவர் பலியாயினர் 13 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சேலத்தை சேர்ந்த சித்தையன் என்பவர் ஒட்டி வந்தார்.
லாரி அருப்புக்கோட்டை பை-பாஸ் ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது திடீதான டயர் பஞ்சராகியது. லாரியை நிறுத்தி டயரை கழட்டசித்தையன் முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது திசையன்விளையிலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது கண் இமைக்கும் நேரத்தில் நின்றிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சின் இடது புறபாதி பகுதி லாரியினுள் புகுந்துவிட்டது. அந்த விபத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து சென்னை சென்ற கார் ஒன்று பஸ்சின் பின்பக்கம் மோதியது. திடீரென நடந்த அடுத்தடுத்த விபத்தில் சேலம் ஓமலூரை சேர்ந்த லாரி டிரைவர் சித்தையன் (64) மற்றும் பஸ்சில் பயணம் செய்த தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த
ரவி அண்ணாத்துரை (54) ஆகியோர் பலியாயினர்.


லாரி கிளீனர் உதயக்கனி 36 ஆம்னி
பஸ் டிரைவர் திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துகுமார் (23), மேலும் பஸ்சில் பயணம் செய்த குளச்சலை சேர்ந்த தங்கமாரியப்பன், தூத்துகுடியை சேர்ந்த முத்துகுமார் (52), செல்வின் (42), அவரது 1 மாத குழந்தை ஜெயசந்த், சோனாலின், திசையன்விளை ராஜா (19), சென்னையைச் சேர்ந்த சுரேஷ்(42), பத்மாவதி (58), காரில் பயணம் செய்த ஏரலை சேர்ந்த சுயம்புலிங்கம் (48), க்யூபாத் (42), எஸ்தலின் (45) ஆகியோர் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


அடுத்தடுத்து நடந்த விபத்து குறித்து நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனார்.

IMG 20220419 WA0058 - 2026
IMG 20220419 WA0054 - 2026
IMG 20220419 WA0059 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.