Thirupathi - 2026

பக்தர்கள் கவனத்திற்கு.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா
Thirupathi - 2026

ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வருகிற 25-ஆம் தேதி முதல் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வருகிற 25-ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை போன்ற ஆர்ஜித சேவைகளான ஜூலை மாத டிக்கெட் குலுக்கல் முறையில் வருகிற 25-ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

எனவே பக்தர்கள் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொண்டால் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவே பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் கோவிலுக்கு வரும் பொழுது இரண்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான சான்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.