மக்களே இது போன்ற போலி செய்திகளை நம்பாதீர்கள்: மத்திய அமைச்சகம் எச்சரிக்கை!

Published:

post office - 2026

இந்தியா போஸ்ட் ரூ.6000 வழங்குகிறது உள்ளிட்ட பல்வேறு போலி செய்திகளை பரப்பும் இணையதளங்கள் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது..

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அரசின் நலத்திட்டங்கள், நிதியுதவி தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

அந்த வகையில் இந்தியா போஸ்ட் பெயரில் சில சர்வேக்கள் மற்றும் வினாடி வினாக்கள் மூலம் அரசு மானியங்களை வழங்குவதாக கூறி போலியான செய்திகள் பரவி வருகின்றன.

மேலும் இந்தியா போஸ்ட் நடத்தும் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றால் ரூ.6000 பரிசை வெல்லலாம் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா போஸ்ட் பெயரில் நடைபெறும் இந்த மோசடி மத்திய தகவல் அமைச்சகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய போஸ்ட் சமீபத்திய நாட்களில், வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பல்வேறு URLகள்/இணையதளங்கள் பரப்பப்படுவதையும், சில சர்வேக்கள், வினாடி வினாக்கள் மூலம் அரசு மானியங்களை வழங்குவதாவும், பரிசுத் தொகை வழங்குவதாகவு கூறி, URLகள்/ சுருக்கமான URLகள் அடங்கிய மின்னஞ்சல்கள் / குறுஞ்செய்திகள் மூலமாகவும் பரப்பப்படுவதை இந்தியா போஸ்ட் கவனித்து வருகிறது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஆனால் சர்வேக்களின் அடிப்படையில் மானியங்கள், போனஸ் அல்லது பரிசுகளை அறிவிப்பது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் இந்திய போஸ்ட் ஈடுபடவில்லை. அத்தகைய அறிவிப்புகள்/செய்திகள்/மின்னஞ்சல்களைப் பெறும் பொதுமக்கள், இதுபோன்ற போலியான செய்திகளை நம்பவோ அல்லது பதிலளிக்கவோ அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிரவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிறந்த தேதி, கணக்கு எண்கள், மொபைல் எண்கள், பிறந்த இடம் மற்றும் OTP போன்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த URLகள் / இணைப்புகள் / வலைத்தளங்களைத் தடுக்க இந்திய அஞ்சல் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

எவ்வாறாயினும், பொதுமக்கள் எந்தவொரு போலியான செய்திகள் / இணைப்புகளை நம்பவோ அல்லது பதிலளிக்கவோ வேண்டாம்.

இந்திய அஞ்சல் மற்றும் இந்திய தகவல் பணியகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்பு பிரிவு சமூக ஊடகங்கள் மூலம் இந்த URLகள்/இணையதளங்கள் போலியானவை என அறிவித்துள்ளன” என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img