சட்டசபையில் இபிஎஸ்,ஓபிஎஸ் கடும் விவாதம்..

Published:

images 61 - 2026

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் கடும் விவாதம் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் இன்று பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.) பேசும்போது, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 32 ஆண்டுகள் ஆண்ட கட்சி. எங்கள் தலைமை கழகத்தில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

நாங்கள் அதற்கு முன்பே போலீசுக்கு தகவல் கொடுத்தோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை என்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அன்று திட்டமிட்டு சிலர் புகுந்து தாக்கியதாக கூறினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் எழுந்து அன்று நடந்த சம்பவம் வேதனையளிக்க கூடியது. நாங்கள் நிராயுதபாணியாக நின்றோம் என்று விவரித்தார்.

வன்முறையாளர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் வேடிக்கை பார்த்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று கூறினார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img