தென் ஆஃபிரிக்காவில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில், காண்டாமிருகங்களை வேட்டையாட சென்றவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு நபர்களை அங்குள்ள சிங்கங்கள் கடித்து தின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிபுயா பூங்காவில் உள்ள சிங்கங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மூன்று நபர்களின் உடல் பாகங்கள், துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய அதிகாரிகள், இது கண்டா மிருக வேட்டைக்காக நடந்த சம்பவம் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பத்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.



