அடிக்கடி தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பைக்..

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வை தாங்காத மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பைக் மீது மோகம் அதிகரித்து எலக்ட்ரிக் பைக் விற்பனை அதிகரிக்கும் நிலையில் இவைகள் அடிக்கடி தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளாவதால் உயிரிழப்பு பெரும் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

கடந்த மாதம் வேலூரில் வீட்டுக்குள் வைத்து எலக்ட்ரிக் பைக் பேட்டரிக்கு சார்ஜ் போட்டபோது பைக் வெடித்து சிதறியது. இதில் தந்தை, மகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் நடந்த 1 மாதத்திற்குள் மேலும் 2 இடங்களில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஆந்திராவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது மனைவி, 2 மகள்கள் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம், விஜய சூர்யராவ்பேட்டை குலாபிபேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (35), டி.டி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஆர்த்தி(30), மகள்கள் பிந்து (10), சசி(6). சிவக்குமார் நேற்று முன்தினம் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கினார்.

இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் சார்ஜ் செய்வதற்காக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக எடுத்து சென்று சார்ஜ் போட்டு வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கினார்.அதிகாலை 3 மணியளவில் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. வீட்டில் உள்ள மின்சார ஒயர்களும் தீப்பிடித்து அறையில் இருந்து புகை வெளியேறியது.

இதில் தீக்காயமடைந்த சிவக்குமார் குடும்பத்தினர் அலறியடித்து எழுந்தனர். வீட்டில் இருந்து வெளியேற வழியில்லாமல், அவர்கள் சமையல் அறைக்கு ஓடிச்சென்று அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று படுகாயமடைந்த சிவக்குமார் மற்றும் குடும்பத்தினரை மீட்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.

அவரது மனைவி ஆர்த்தி. மகள்கள் பிந்துஸ்ரீ, சசி ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆர்த்தி அபாய கட்டத்தில் உள்ளார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் பிரபலமாகி விற்பனை அதிகரிக்கும் நிலையில் எலக்ட்ரிக் பைக் பேட்டரிகள் தொடர்ந்து தீப்பிடித்து எரிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப் பிரச்சினை க்கு அரசு தீர்வு காண வேண்டும் .

images 22 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories