corona - 2026

அமெரிக்காவில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா..

சற்றுமுன்

அமெரிக்காவில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கும் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட என்ஜினீயர் வீட்டை சுற்றி நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அமெரிக்காவில் இருந்து வந்த என்ஜினீயருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் குமரி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

corona - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.