boy 1 - 2026

பழிக்குபழி வாங்கிய சிறுவன்! ஐபிஎல் மைதானத்தில் நடந்த சம்பவம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
boy 1 - 2026

ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய போட்டியாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும் பரபரப்புக்கு இடையே நடந்து முடிந்துள்ளது.

தல தோனி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கடைசி ஓவர் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றித் தேடித் தந்து, உலகின் தலைச்சிறந்த பினிஷர் நான் தான் என்பதை நிரூபித்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, இப்போட்டியில் இருந்து வெற்றிக் கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை ரசிகர்களும் ரோகித் படையை வெகுவாக நம்பியிருந்தனர். அவர்களின் நம்பிக்கையும் 19வது ஓவர் வரை நீடித்தது. ஆனால், ஒரே ஒரு ஓவரில் அவர்களின் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்தெறிந்தார் தோனி.

முதல் வெற்றியை பெற்றுவிடுவோம் என காத்திருந்த மும்பை ரசிகர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. மைதானத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கூட, இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதாவது தோனி களத்தில் இருப்பதை மறந்துவிட்டு முன்கூட்டியே வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறுவனிடம் சென்று, வெற்றி பெற்றதுபோல் சேட்டை செய்து களேபரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அப்போது பொறுமையாக இருந்த அந்த சிறுவன், சென்னை வெற்றி பெற்றதும், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் செய்த சேட்டையை, அவர்கள் இடத்துக்கே சென்று செய்து காட்டி மொக்கை செய்துள்ளார்.

இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் முன்பு அவர் ஆடும் ஆட்டம் காண்போரை வெகுவாக சிரிக்க வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.