Statue - 2026

மீன்பிடிக்கும் போது அகப்பட்ட பழங்கால சிலை!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
Statue - 2026

தடுப்பணையிலிருந்து 2 அடி உயர சாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வாலாஜாபாத் அருகே பழைய சீவரம் பாலாறு அமைந்துள்ளது.

இங்கு கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ஏராளமானோர் வலைகளை வீசி மீன் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது. எனவே மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் அதனை எடுத்து பார்த்தபோது ஒரு கல்லால் ஆன சாமி சிலை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து பழைய சீவரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின் படி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 அடி உயர சாமி சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இச்சிலை 2 அடி உயரம் கொண்டதாகவும், குதிரை வாகனத்துடன் கையில் தாமரை மொட்டுக்களை வைத்துள்ள சந்திரபகவான் சிலை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதனை சோதனை செய்து பார்த்த பிறகே எந்த நூற்றாண்டை சேர்ந்த சிலை என்பதை கண்டறிய முடியுமென்று வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.