
கொழும்பு: இலங்கையின் பிரதமராக அதிபர் சிறீசேனாவால் நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் பிரதமர் மஹிந்த ராஜபட்ச ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி, கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது. அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க 16 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என ராபட்ச கேட்டதாகவும், இதையடுத்து ராபட்சவுக்கு ஆதரவு அளிக்க இரா.சம்பந்தன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ராஜபட்சவுக்கு ஆதரவு அளிப்பதற்காக, இரா.சம்பந்தன் சில நிபந்தனைகளை விதித்தாராம். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை அவர் ராஜபட்சவிடம் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.



