
திருவனந்தபுரம்: கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை… சாமியே ஐயப்போ… என்று சரண கோஷம் போட தயாராகி வருகிறார் பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்து களத்தில் குதித்ததால் போராட்டம் மிகப் பெரும் அளவில் நடைபெற்றது.
அதேநேரம் போராட்டம் நடத்தியவர்களை ஒடுக்கும் விதமாக அவர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி, லட்சக் கணக்கில் பிணைத் தொகை விதிக்கும் அளவுக்கு அராஜக நடவடிக்கைகளில் இறங்கி, பக்தர்களையும் அப்பாவி இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் கைது செய்து வருகிறது கேரள அரசு!
இந்நிலையில் கேரளா வந்த பாஜக., தேசிய தலைவர் அமித்ஷா கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், பக்தர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் கம்யூனிச அரசு ஆட்சியில் இருந்து இறக்கப்படும் என்று எச்சரித்தார். பதிலுக்கு முதல்வர் பிணரயி விஜயனும், பாஜக., தயவில் நாங்கள் ஆட்சி செய்யவில்லை என்றும் மக்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்துவதாகவும் கூறினார்.
இதனிடையே, கேரளாவில் இருந்து தில்லி திரும்பும் முன் கேரள பாஜக., தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்திய போது, அடுத்த மாதம் வரும் மண்டல பூஜையின் போது தான் சபரிமலை கோவிலுக்கு வந்து தரிசிக்க விரும்புவதாகவும், தலையில் இரு முடி கட்டி பம்பையில் இருந்து நடை பயணமாக சன்னிதானம் சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதை அடுத்து, அமித் ஷா சபரிமலை வரும் தேதி இறுதி செய்யப்பட உள்ளது.




அத௠கலà¯à®²à¯à®®à¯, à®®à¯à®³à¯à®³à¯à®®à¯ !