‌பூனையென நினைத்து சிறுத்தையை தூக்கி வந்த தொழிலாளர்கள்!

Leopard - 2026

நீலகிரி அருகே பூனைக்குட்டி நினைத்து சிறுத்தைக் குட்டியை தூக்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டி பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே ஏதோ சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்த தொழிலாளிகள் செடிகளுக்கு இடையே பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தைக் குட்டி ஒன்று கிடந்துள்ளது.

Leopard 2 - 2026

இதை பார்த்த அவர்கள் பூனைக்குட்டி என நினைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அது பூனைக்குட்டி இல்லை சிறுத்தைக் குட்டி என கூறியுள்ளனர்.

Leopard3 - 2026

இதனை அடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தைக் குட்டியை மீட்டு, அது கிடந்த அதே இடத்தில் விட்டுள்ளனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், ‘தாய் சிறுத்தை இரை தேடுவதற்காக சென்று இருக்கலாம். அதற்காக குட்டியை பாதுகாப்பான இடத்தில் விட்டுச் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது.

அதனால் அந்த குட்டி எங்கு எடுக்கப்பட்டதோ அதே பகுதியில் மீண்டும் விடப்பட்டுள்ளது. நான்கு வனத்துறை அதிகாரிகள் அதனை கண்காணித்து வருகின்றனர்.

Leopard1 - 2026

நிச்சயம் தாய் சிறுத்தை குட்டியை எடுத்துச்செல்லும் என நம்புகிறோம். அதுவரை வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்’ என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories