கத்தரிக்கோலை இறுகப் பற்றிய பிறந்த குழந்தை!

Published:

baby 2 - 2026

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, தாயை விட்டு பிரிய மனமில்லாமல் கத்திரிகோலை இறுக்கமாக பிடித்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் வடமாநில பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தையை தாயிடமிருந்து பிரித்து குழந்தை நல மருத்துவரிடம் வழங்க அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரான அனுரத்னா குழந்தை நல மருத்துவரிடம் கொடுக்க முயற்சி செய்தார்.

அப்போது தாயின் வயிற்றிலிருந்து அறுவைசிகிச்சை செய்து எடுக்கப்பட்ட அக்குழந்தை தன் தாய் விட்டுச் செல்ல மனதின்றி சிகிச்சைக்கு பயன்படுத்திய கத்திரிக்கோலை மருத்துவர்களைப் போன்றே இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பதை கண்ட மருத்துவர் குழு வியப்பில் ஆழ்ந்தது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img