December 23, 2025, 12:59 PM
29.3 C
Chennai

14 வயது சிறுவன் கண்டுபிடித்த ரோபோ!

Robot1 - 2025

தற்போது உலோக பாகங்களை நகர்த்துவதில் இருந்து காபி வழங்குவது வரை அனைத்து பயன்பாடுகளிலும் ரோபோ பங்காற்றத் தொடங்கி விட்டது.
குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்தவகையில் ஜப்பானில் சுமார் ஆயிரம் வோல்டேஜ் மின்சாரத்தை கடத்தும் ரயில்வே உயரழுத்த மின்கம்பிகளில் அதிநவீன ரோபோ ஒன்று பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது.

அதிக ஆபத்துஇருக்கும் ரயில்வே மின்கம்பிகளில் பணியாளர்கள் பராமரிப்பு மேற்கொள்வது என்பது சவாலானதாக அமைந்துள்ளது. எனவே இதனை எளிதுப்படுத்தும் வகையிலும் விரைவாக இப்பணிகளை செய்து முடிக்கவும் ராட்சத கிரோன் மூலம் ரோபோ அனுப்பப்படுகிறது.

மனிதர்களின் உதவியுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் இந்த விஆர் வகை ரோபோ, மனிதர்களை போன்ற செயல்பட்டு மின் இணைப்பு கம்பிகளை பொருத்தி நுட்பமாக வேலையை செய்து முடிக்கிறது.

அதேபோல் மூன்று பணியாளர்களின் வேலையை ஒரே ரோபோ செய்துமுடிப்பதாகவும், பின்பு இந்த திட்டம் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்றும் ஜப்பான் நாட்டு ரயில்வே கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Zidane Shanas1 - 2025

மேலும் ரோபாடிக்ஸ் துறையில் மனிதர்களின் கண்டுபிடிப்பும் பங்காற்றலும் பெருமளவு முன்னேறி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த 14-வயது சிறுவன் ஜிடான் ஷனாஸ் ஒரு அசத்தலான ரோபோவை உருவாக்கியுள்ளான். குறிப்பாக 9-ம் வகுப்பு படிக்கும் ஜிடான் ஷனாஸ், ரோபோவை உருவாக்கி அதற்கு ராஸ்பி என்று பெயரிட்டுள்ளார், குறிப்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க கூடிய வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மோட்டார், பேட்டரிகள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் எப்போதும் இளம் ஜிடான் ஷனாஸைக் கவர்ந்தன. குறிப்பாக இந்த சிறுவன் தனது பொம்மைகளுடன் விளையாடி சலிப்படைந்த பிறகு, அவற்றை மாற்றத் தொடங்கினான்.

Robot - 2025

அதாவது காலப்போக்கில், அவரது ஆர்வம் புதிய தொழில்நுட்பங்கள் மீது திரும்பியது. குறிப்பாக ஜிடான் மென்பொருளில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

தற்போது 14 வயதான இவர் ராஸ்பி என்ற ரோபோவை உருவாக்கியுள்ளார். சுமார் ஒரு வருடமாக விரிவான ஆராய்ச்சி செய்து ஜிடான் தன்னைப் போன்ற உயரமான ரோபோவை உருவாக்கினார்.

எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது என் அம்மா எனக்கு ஒரு சோலார் பொம்மையைக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் நான் அதை உடைத்தேன். அதன் பேட்டரிகள் மற்றும் மோட்டார்களைப் பயன்படுத்தி, சொந்தமாக ஒரு காரைத் தயாரித்தேன், என்று ஜிடான் கூறியுள்ளார்.

அதேபோல் இந்த சிறுவன் உருவாக்கியுள்ள ரோபோ குறித்து பார்க்கையில், Arduino Bluetooth எனப்படும் செயலி மூலம் இந்த ரோபோ கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக F-ஐ அழுத்துவதன் மூலம் முன்னோக்கி நகரத் தொடங்குகிறது மற்றும் B-அழுத்துவதன் மூலம் பின்னோக்கி நகர்கிறது.

குறிப்பாக ரோபோவின் கால்களில் நான்கு 12W Dcமோட்டார்கள் உள்ளன. மேலும் இதை உருவாக்க C programming மற்றும் பைத்தானின் மேம்பட்ட வடிவத்தையும் பயன்படுத்தினேன் என்று கூறியுள்ளார் ஜிடான் ஷனாஸ்.

Zidane Shanas - 2025

குறிப்பாக குரல் கட்டளையின்படி இந்த அசத்தலான ராஸ்பி ரோபோ நகர்கிறது. மேலும் ஜிடானின் கூற்றுப்படி, ராஸ்பி ரோபோ உடன் சாதாரண உரையாடல்களை நடத்த முடியும், பின்பு பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடிய வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ரோபோ இசையை இயக்குகிறது மற்றும் நடப்பு நிகழ்வுகள் அல்லது ஜிடானின் டெஸ்க்டாப்பில் இருந்து ஏதேனும் புதுப்பிப்புகளை ஒரு கட்டளையுடன் காட்டுகிறது.

9-ம் வகுப்பு படிக்கும் ஜிடான் ஷனாஸ் உருவாக்கியுள்ள இந்த ராஸ்பி ரோபோ இரண்டு முதல் மூன்று கிமீ வேகத்தில் நகரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் எதிர்காலத்தில் நமக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம் என்று கூறியுள்ளார் ஜிடான்.

மேலும் இந்த அருமையானரோபோவை உருவாக்கிய ஜிடான் ஷனாஸ்-க்கு பல்வேறு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

Topics

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder

சபரிமலை வருபவர்களுக்கு இன்று முதல் பாரம்பரிய ‘சத்யா’ உணவு தொடக்கம்!

ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய உணவாக மதியம் சத்யா பரிமாறத் தொடங்கப்பட்டுள்ளது.

பரமன் அளித்த பகவத் கீதை! தொடர் – 2

பகவத் கீதை : எனது தந்தையார் மறைதிரு வைத்தீஸ்வரன்முனவர் கு.வை.பால சுப்பிரமணியன்பகவத்கீதை...

Entertainment News

Popular Categories