images 30 3 - 2026

1முதல்9வகுப்புமாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்கள்..

சற்றுமுன்

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களே கட்டாயம் ஆண்டு இறுதி தேர்வு எழுதியே ஆகனும்.

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பது வகுப்பு வரை ஆல்பாஸ் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இது தவறு என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கூறியிருப்பதாவது,

புதுவையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது. தேர்வு இல்லாமல் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் அறிவிக்கப்படும் என்பது தவறான தகவலாகும்.

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கட்டாயம் இறுதித்தேர்வு நடத்தப்படும். திட்டமிட்டபடி மே6 முதல் 13ந்தேதிக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்படும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.என பள்ளிக் கல்வித்துறை கூறி உள்ளது.ஆகவே மாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்கள்.

images 30 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.