பால் இருக்கா உடனே செய்ய அருமையான ஸ்விட்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
pirni - 2026

ஃபிர்னி
தேவையான பொருட்கள்:
பால். -1 லிட்டர்
ஏலக்காய் பொடி. -1/4 தேக்கரண்டி
அரிசி, ஈர மாவாக, தண்ணீர் சேர்த்து அரைத்தது. -100 கி.
சர்க்கரை. _6 மேசைக்கரண்டி
குங்குமப்பூ, மென்சூடான நீரில் இட்டு கலக்கப்பட்டது. -ஒரு துளி
நறுக்கிய பிஸ்தா. – 1/2 தேக்கரண்டி

செய்முறை
பால் மற்றும் ஏலக்காய் பொடியை ஒரு வாணலியில் இடவும், பின்னர் கொதிநிலைக்கு கொண்டு வரவும்.
அரிசி மாவை அதில் சேர்த்து, அது வேகும் வரையும் பால் கெட்டிப்படும் வரையும் மிதமான சூட்டில் வைக்கவும். சர்க்கரை சேர்த்து, அது கரையும் வரை தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும். அது குளிர்வதற்கு தனியாக வைக்கவும்.
குங்குப்பூவை இட்டு கலக்கவும். மண் அச்சுகளில் ஊற்றி குளிர்விக்கவும். மேலே பிஸ்தாவை தூவி, ஜில்லென்று பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.