விமானத்தில் இருந்து விழுந்து 3 விமானிகள் உயிரிழப்பு!

Published:

Du 22M3 bombing aircraft - 2026

விமானத்திலிருந்து விழுந்து 3 விமானிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள விமானப்படை தளத்தில் ஒலியை விட வேகமாக செல்லும் இரட்டை என்ஜின் கொண்ட டியூ-22எம்3 ரக குண்டு வீச்சு விமானம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட தயாராக இருந்தது.

விமானத்தில் விமானிகள் 3 பேர் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, விபத்து காலங்களில் விமானிகளை தானாக விமானத்தில் இருந்து வெளியேற்றும் அமைப்பு தவறுதலாக செயல்பட்டு 3 விமானிகளையும் வெளியேற்றியது.

இதில் 3 பேரும் விமானத்திலிருந்து தரையில் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.‌ உடனடியாக மருத்துவமனையிக்குல கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related articles

Recent articles

spot_img