கொரோனா: அமிர்கானை தொடர்ந்து மாதவனுக்கும் தொற்று!

Published:

madi 2
madi 2

நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்தியா முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது இரண்டாவது அலை காரணமாக இந்தியா முழுவதுமே தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

மும்பையில் வசித்து வரும் திரையுலக, அரசியல் பிரபலங்களும் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர் போன்ற நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், நடிகர் அமிர் கானுக்கும் கொரோனா தொற்று உறுதியானது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று இருப்பதை நடிகர் மாதவன் அவரது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மும்பையில், அமீர்கானின் வீடு இருக்கும் குடியிருப்பில் தான் நடிகர் மாதவனும் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img