கேரளாவில் இன்று முதல் பஸ்கட்டணம் உயர்ந்ததால் ராஜபாளையம் செங்கோட்டை நாகர்கோவில் தேனி உட்பட தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்களில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.
கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ, டாக்சி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கேரள மாநில போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தியது.
மேலும் அரசு பஸ்சில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.12-ஆகவும், விரைவு பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.14-ல் இருந்து ரூ.15-ஆகவும், அதிவிரைவு பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.20-ல் இருந்து ரூ.22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தனியார் பஸ், ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்க கேரள மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதால் இவைகளிலும் கட்டண உயர்வு இன்று மே 1 முதல் அமுலுக்கு வந்தது.
இதனால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. தென்காசி,செங்கோட்டை,ராஜபாளையம், மதேரை,தேனி, நாகர்கோவிலில் இருந்து கேரளா செல்லும் தமிழக அரசு பஸ்களில் கட்டணம் ரூ3இல் இருந்து உயர்த்தப்பட்டுள்ளது.
