முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்வு எழுதுவோர் வலியுறுத்தி வருகின்றனர்.
மே 21-ந்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 85 சதவீத முதுநிலை நீட் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆன்லைன் வழியாக நடத்திய ஓட்டெடுப்பில் இதனை தெரிவித்துள்ளனர்.
மருத்துவ கலந்தாய்வு நடைபெறுவதால் அதற்கு தேவையான கால அவகாசம் வேண்டும் என்று முதுநிலை மருத்துவ டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
