அரசு பேருந்துகளில் 106.34 கோடி பெண்கள் இலவச பயணம் ..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

தமிழகத்தில் அரசு பேருந்துகளில்
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படாது என
போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலுரை ஆற்றினார்.
அவர் பேசியதாவது,
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா சலுகை மூலம் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி, 106.34 கோடி பெண் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து, மே 12ல் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்.

தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரைக்கட்டணத்தில் பயணசீட்டு வழங்கப்படுகிறது.தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.

பள்ளி வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தும் வகையில் சிறப்பு விதிகள் கொண்டுவரப்படும்.
விழா நாட்கள் நீங்கலாக இணையவழியில் இரு வழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% கட்டண தள்ளுபடி வழங்கப்படும்
சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

images 86 - 2026
ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img