டக் அடிக்கும் விராட்கோலி.. மிம்ஸ் போட்டு வைரலாக்கும் நெட்டிசன்ஸ்..!

07 Oct22 dhin Virat Kohli - 2026
07 Oct22 dhin Virat Kohli

நடப்பு ஐ.பி.எல்லில் ஆர்.சி.பி வீரர் விராட் கோலி கடுமையாகச் சொதப்பி வருகிறார்.
கடந்த சீசனுடன் அவ்வணியின் கேப்டன் பொறுப்பைத் துறந்த அவர், இம்முறை பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் பந்திலேயே அவுட் ஆனார் விராட் கோலி. அந்த வகையில் நடப்புத் தொடரில் 12 போட்டிகள் விளையாடியுள்ள விராட் கோலி வெறும் 216 ரன்கள் மட்டுமே இதுவரை பெற்றுள்ளார்.

இத்தொடரில் ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆன அவர் இம்முறையும் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார். விராட் கோலி 2008 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாகவே 3 முறை மட்டுமே கோல்டன் டக் அவுட் ஆகி இருந்தார்.

ஆனால் நடப்புத் தொடரில் மட்டுமே இதுவரை 3 முறை கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார். இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு விராட் கோலி ஆளாகியுள்ளார்.

நேற்றைய போட்டியில் கோல்டன் டக் ஆனதையடுத்து இது தொடர்பாக நிறைய மீம்களும் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்த ஜீரோ படத்தின் போஸ்டரை இணைத்தும் மீம்கள் உலாவருகின்றன.

கே.ஜி.எஃப்- 2 படத்தில் யஷ் பேசியிருந்த பாப்புலர் வசனத்தைக் கொண்டும் விராட் கோலியின் டக் அவுட்டை விமர்சித்து சிலர் பதிவு வெளியிட்டுவருகின்றனர்.

இவை ஒருபுறம் இருந்தாலும் விராட் கோலிக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர். ஃபார்ம் அவுட்டில் உள்ள விராட் கோலி விரைவில் ஃபார்முக்குத் திரும்பி சிறப்பாக விளையாடுவார் என அவர்கள் கூறிவருகின்றனர்.

விராட் கோலியைப் பொறுத்தவரை நடப்பு ஐபிஎல் சற்று சொதப்பலாக இருந்துவந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரரும் விராட் கோலிதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories