dog 1 - 2026

பயத்தோடும் நாய்கள்.. எத்தனை நாள் கனவோ..!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
dog 1 - 2026

தெருக்களில் நடுமாடும்போது நாய்களின் தொல்லை தாங்க முடியாது. திடீரென ஏதாவதொரு சந்தில் இருந்து வரும் நாய், நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்க வரும்.

உஷாரான ஒருவர் தெரு நாய்களையே அலற விட்டிருக்கிறார். கடிக்க வந்த நாய்களை தலை தெறிக்க ஓடவிட்டிருக்கிறார்.

அவர் செய்த காட்சி தான் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாகியுள்ளது. நாய்களின் தொல்லைக்கு ஏற்கனவே ஆளாகியிருந்திருபார் போலும்.

அதனால், மிக்கி மவுஸ் போல் உடை அணிந்து கொண்டு நாய்கள் இருக்கும் வீதி வழியே செல்லும் அவர், நாய்களை நோக்கி வேகமாக ஓடுகிறார்.

அவரைக் கண்டதும், நம்மை விட பெரிய விலங்கு ஒன்று வருகிறது என நினைத்து, குறைத்தபடியே நாய்கள் ஓடுகின்றன. இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, பார்வையாளர்களுக்கு தானாக சிரிப்பு வருகிறது. இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.