சிறுவனை வலைப் போட்டு தேடிய போலீஸ்! காட்டிக் கொடுத்த கருவி!

Published:

Carson Shephard
Carson Shephard

பாட்டி வீட்டு பரணில் துணியோடு சுற்றிக்கிடந்த சிறுவனை கருவி ஒன்று கண்டுபிடித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள East Ayrshire என்ற இடத்தில் Gemma Glover என்னும் பெண் தனது ஏழு வயது மகனான Carson Shephardவுடன் வசித்து வருகிறார்.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Carson Shephard திடீரென காணாமல் போயுள்ளான். இதனை அறிந்த போலீசார் சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களின் தோட்டங்கள் வீட்டின் பின்பகுதியில் உள்ள ஷெட் போன்ற இடங்களில் தேடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுவனை ஹெலிகாப்டர், மோப்பநாய் இது தவிர தீயணைப்பு வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சிறுவனின் பாட்டி வீட்டிலும் மூன்று தடவை தேடியுள்ளனர்.

இறுதியில் சிறுவனை உடலின் வெப்பத்தை வைத்து மனிதர்களை கண்டறியும் thermal imaging cameras என்னும் கருவியுடன் தேடியுள்ளனர்.

அப்போது சிறுவன் அவனின் பாட்டியின் வீட்டில் உள்ள பரணில் துணியோடு துணியாக சுருண்டு கிடந்துள்ளான். குறிப்பாக சிறுவனை thermal imaging cameras மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இல்லையெனில் சிறுவனை கண்டுபிடிப்பது இயலாத காரியமாக இருந்திருக்கும். இதனை அடுத்து Gemma தன் மகன் கிடைத்துவிட்டான் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். இதன் பின்னர் தான் அனைவரும் நிம்மதியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img