images 16 1 - 2026

அசானி புயல் சென்னையில் 10 விமானங்கள் ரத்து..

சற்றுமுன்

அசானி புயல் காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அசானி புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.  நுங்ககம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம்  உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அசானி புயல் காரணமாக சென்னைக்கு வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர்  உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

images 16 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.