PNB வாடிக்கையாளர்களா.. உங்களுக்கான தகவல்!

Published:

pnb pic - 2026
pnb pic

நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளராக இருந்து, வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதேனும் கடன் வாங்கியிருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது.

உண்மையில், பஞ்சாப் நேஷனல் வங்கிக்குப் பிறகு, இப்போது பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.

இந்த முறை பிஎன்பி ஹவுசிங் வீட்டுக் கடனுடன் சேர்த்து பல சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய கட்டணங்கள் அதாவது மே 9 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங்கின் கீழ், வாடிக்கையாளர்கள் வீடு கட்டுவதற்கும், வீடு வாங்குவதற்கும் கடன் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சில்லறை வணிகம் மற்றும் கார்ப்பரேட் ஆகிய இரண்டுக்கும் பங்கு உண்டு. ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் இதற்கு அதிக இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும்.

இது தவிர புதிதாக கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டும். முன்னதாக, கடந்த மே 7 ஆம் தேதி பிஎன்பி வங்கியும் அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

பஞ்சாப் நேஷனல் வங்கி முக்கிய தகவலை அளித்துள்ளது
இது குறித்த விரிவான தகவலை பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் நிறுவனம் அளித்துள்ளது.

அதன்படி, புதிய வட்டி விகிதங்கள் வெவ்வேறு தேதிகளில் இருந்து பொருந்தும். புதிய வாடிக்கையாளர்களுக்கான ஆர்.எல்.எல்.ஆர் மே 7, 2022 முதல் அமலுக்கு வந்தது.

அதே நேரத்தில், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கான ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் ஜூன் 1, 2022 முதல் 6.90 சதவீதமாக இருக்கும். அதிகரிக்கப்பட்ட இந்த வட்டி விகிதமானது ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த நடவடிக்கையானது பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில் வந்துள்ளது. முன்னதாக ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.

இது மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை திடீரென 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில் அதிகரித்துள்ளது.

கடனுக்கான விகிதம் மட்டும், அல்ல, சேமிப்பு டெபாசிட்களுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்களுக்க்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 5.10 – 5.15 சதவீதம் வரையில் அதிகரிக்கபபட்டுள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img