அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும்-இந்திய வானிலை ஆய்வு மையம்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

தீவிர புயலாக இருக்கும் அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு அசானி புயல் என பெயரிடப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியில் இருந்து 590 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள அசானி புயல் இன்று இரவு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது தீவிர புயலாக இருக்கும் அசானி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
images 18 - 2026

Related articles

Recent articles

spot_img