images 45 1 - 2026

சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி..

சற்றுமுன்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நாளை 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

images 45 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.