marriage 5 - 2026

தீப்பிடிக்க தீப்பிடிக்க‌‌.. திருமணம் செய்யடா..! வைரலான மணமக்கள் வீடியோ!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம் பொது தகவல்கள்
marriage 5 - 2026

திருமணங்கள் இன்றைக்கு கொண்டாட்டமான நிகழ்வாக திட்டமிட்டப்படுகின்றன. திருமணத்திற்கு முன், பின், திருமணத்தின் போது என ஷெட்யூல் போட்டு போட்டோசூட், ரீல்ஸ், டிக் டாக் ( நம் ஊரில் டிக்டாக் இல்லை, வெளிநாடுகளில் சொல்றேன்) என மணமக்கள் மெனக்கெடுவதும் ட்ரென்டிங் ஆவதற்காக செலவழிப்பதும் அதிகரித்து வருகிறது.

இன்னும் ஒரு படி மேலாக போய் இந்தத் தம்பதிகள் செய்திருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் ஸ்டண்ட் தம்பதிகளான கேபே (Gabe Jessop) மற்றும் அம்பியர் (Ambyr Bambyr) திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து வெளியே வருகின்றனர். மணமகள் அம்பியர் கையில் இருக்கிற பூங்கொத்து தீப்பிடித்து எரிகிறது.

விபரீதம் எதுவும் ஆகிவிட்டதோ எனப் பதறி போய் பார்த்தால் அதெல்லாம் இல்லை, இது ஸ்டன்ட் தான் என்கிறார்கள்.

கோஸ்ட் ரைட்டர் படத்தில் வரும் நிக்கோலஸ் கேஜ் போல தங்களின் பின்புறம் தீப்பிடிக்க அவர்கள் நடந்து வந்து ஸ்டைலாக முன்புறம் மண்டியிட்டு அமர்கிறார்கள். தீ அணைக்கப்படுகிறது.

`ஸ்டன்ட் மாஸ்டர்கள் திருமணம் செய்யும் போது’ என கேப்ஷன் பதிவிட்டு அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு கூடியிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.