தமிழகத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வரும் நிலையில் வரும் மே 23-முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
- இதன் படி கோவை- மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.30 மணிக்கு சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்து சேரும்.
சேலம்- விருத்தாச்சலம்- சேலம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் சேலத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலத்திற்கு பகல் 1.05 மணிக்கு சென்றடைகிறது. விருத்தாச்சலத்தில் இருந்து பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடைகிறது.
மயிலாடுதுறை-தஞ்சாவூர்- மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 9.10 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல தஞ்சாவூரில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேருகிறது.
காட்பாடி- விழுப்புரம்- காட்பாடி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் காட்பாடியில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. விழுப்புரத்தில் இருந்து இரவு 7.05 மணிக்கு புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு காட்பாடி வந்து சேருகிறது.
இந்தநிலையில் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற செங்கோட்டை-மதுரை-செங்கோட்டை பகல் நேர ரயில், செங்கோட்டை-திருநெல்வேலி-மயிலாடுதுறை, எர்ணாகுளம்-செங்கோட்டை-ராஜபாளையம்-வேளாங்கண்ணி ரயில்களை மீண்டும் இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
