ரஷ்யா உக்ரைன் போரால் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதியை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோதுமை உள்நாட்டில் விலையேற்றம் ஏற்படாமல் இருக்க உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடி தடைவிதித்தது
பிற நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு கோதுமை தேவை இருப்பின் மட்டுமே அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.





