பிரதமர் மோடி வரும் 26 ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் , தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் மோடி, மத்திய அரசின் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளதாகவும், மதுரை – தேனி அகல ரயில் பாதையில் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார்.அப்போது சுமார் ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
சென்னை வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
