800594 - 2026

கோவை, கரூர், ஈரோடு, சேலம் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம்,உற்பத்தி பாதிப்பு..

சற்றுமுன்

நூல் விலை உயர்வை கண்டித்து கோவை, கரூர், ஈரோடு, சேலம் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலைநிறுத்தம் நடத்தபப்டுகிறது. திருப்பூரில் 10,000 பின்னலாடை நிறுவனங்கள், அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிருவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இம்மாதம் கிலோ ரூ.40 உயர்ந்தது.

பஞ்சு விலை ஒரே ஆண்டில் 2 மடங்கு உயர்ந்து ஒரு கேண்டி ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதால் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பருத்தி பதுக்கலை கண்டருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்கால் நாளொன்றுக்கு ரூ.360 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பருத்தி, நூல் ஏற்றுமதியை மத்திய அரசு ரத்து செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். கோவை, கரூர், ஈரோடு, சேலம், பகுதிகளிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்களும் இன்று (மே 16) மூடப்பட்டிருந்தன. இதனால் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.100 கோடி ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.கோவை, கரூர், ஈரோடு, சேலம் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

800594 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.