உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில்
பதினெட்டாம் படிக்கு மேல் ஹைட்ராலிக் கூரை கட்டப்பட உள்ளது.நாளை காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
பிரபலமான 18படியில் படிபூஜையின் போது மழை நனையாமல் இருக்க சபரிமலை சன்னிதானத்தின் முன் ஹைட்ராலிக் கூரை அமைக்கப்படும். ஒரு மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும். இதற்காக ஹைதராபாத்தை சேர்ந்த விஸ்வ சமுத்ரா கட்டுமான நிறுவனம் ரூ.70 லட்சத்தை நன்கொடையாக தேவசம் போர்டிடம் ஒப்படைக்கிறது.
இந்த நிதியை பயன்படுத்தி தேவைப்படும்போதும், இல்லாதபோதும் இருபுறமும் மடித்து வைக்கும் வகையில் மேற்கூரை சபரிமலை 18படி நடையில் மேலே அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த கேபிடல் இன்ஜினியரிங் கன்சல்டன்சி நிறுவனம் இந்த வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. நாளை காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும். கட்டுமானத்துக்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 18வது படிக்கு முன் உள்ள கிரானைட் கற்களுக்கு பதிலாக புதிய கற்கள் பதிக்கப்படும். முன்னதாக, சூரிய ஒளி நேரடியாக கொடிக்கம்பத்தில் படாததை கண்டறிந்து கண்ணாடி மேற்கூரை அமைக்கப்படும் என திருவாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது.


