train service - 2026

ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு இரயில்வே!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
train service - 2026

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மக்களின் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன.

தற்போது கொரோனாவிற்கு முந்தைய கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பதிவில்லா ரயில்களும் செயல்படத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் முன்பதிவில்லா ரயில்களின் நேர மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மதுரை -ராமேசுவரம் 06651 இடையே காலை 6.35 மணிக்கும், ராமேசுவரம்-மதுரை 06656 இடையே மாலை 6.05 மணிக்கும், திருச்செந்தூர்-திருநெல்வேலி 06674 இடையே காலை 7.10 மணிக்கும், திருநெல்வேலி-திருச்செந்தூர் 06677 இடையே மாலை 6.45 மணிக்கும், செங்கோட்டை-திருநெல்வேலி 06682 இடையே காலை 6.40 மணிக்கும், திருநெல்வேலி-செங்கோட்டை 06657 இடையே மாலை 6.15 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மே 30ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

அதே போல் கோவை -மேட்டுப்பாளையம் 06816 இடையே மதியம் 3.45 மணிக்கும், மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம்-கோவை 06813 இடையே காலை 10.55 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மே23ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.