Homeசற்றுமுன்ஓடும் பைக்கில் செல்ஃபி.. நடந்த விபரீதம்!

ஓடும் பைக்கில் செல்ஃபி.. நடந்த விபரீதம்!

selfie - Dhinasari Tamil

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமூக ஊடகங்க யுகத்தில், அனைவரும் தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். புகைப்படங்கள் மூலமும், செல்பி மூலமும் தங்களை ஆன்லைனில் வித்தியாசமாக காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த செல்ஃபி மோகம் ஆபத்தாக முடிந்து விடுகிறது.

அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் ஒரு நபர் செல்பி எடுக்கும் மோகத்தில் தனது உயிரையே ஆபத்தில் தள்ளுவதை காண முடிகின்றது.

இந்த சம்பவம் முழுதும் கேமராவில் பதிவாகி உள்ளது. ஒரு புறம் இவர்களை பார்க்க பாவமாக இருந்தாலும், மறுபுறம் இந்த வீடியோவை பார்த்து சிரிப்பையும் அடக்க முடியவில்லை.

இந்த வீடியோ சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் நெட்டிசன்களும் இதை மிகவும் விரும்பி வருகின்றார். இதில் நாம் கற்றுக்கொள்ளவும் பாடம் உள்ளது.

பைக்கில் செல்ஃபி எடுத்த நபர்
வெளியான வீடியோ-வைப் பார்த்தால், ​​​​அந்த நபர் தனித்துவமான உள்ளடக்கத்தை உருவாக்கும் விவகாரத்தில் ரிஸ்க் எடுத்துள்ளது தெரிகிறது.

வீடியோவில், நெடுஞ்சாலையில் ஒருவர் முழு வேகத்தில் பைக்கை ஓட்டிச் செல்வதைக் காண முடிகின்றது. திடீரென பைக்கை ஓட்டும் நபர் ஹேண்டிலை விட்டுவிட்டு திரும்பி அமர்ந்துகொள்கிறார்.

பின்னால் அமர்ந்திருந்தவர் அதை விட ஒரு படி மேலே சென்று, பைக்கிலேயே எழுந்து நிற்கிறார். ஆனால், இவர்களின் சாகசம் இதோடு நிற்கவில்லை. நின்றுகொண்டிருக்கும் நபர் தன் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து செல்ஃபி எடுக்கத் தொடங்குகிறார்.

திக்குமுக்காடிய பைக்
அந்த நபர் பைக்கில் ஏறி செல்ஃபி எடுப்பதற்குள் அவர் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுகிறார்.

ஹேண்டிலை விட்டு திரும்பி அமர்ந்திருக்கும் நபரும் பைக்கைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார், ஆனால் அவரால் அது முடியவில்லை. அவரும் விழுந்து விடுகிறார்.

இப்படி தனித்துவமாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தவர்கள், ஒருவர் சாலையிலும் மற்றொருவர் சாலை ஓரத்திலும் விழுந்துவிடுகிறார்கள்.

ஃபிரேமில் இந்த காட்சிகளை பார்த்தால் சிரிப்பு வருகிறது. ஆனால், இதனால் பெரிய ஆபத்து நேரிடக்கூடும் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை.

இப்படி செய்பவர்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் வரும் பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கிறார்கள்.

இந்த வேடிக்கையான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது bhutni_ke_memes என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் நெட்டிசன்கள் அதிக அளவில் பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,795FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...