ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்தில் இன்று காலையிலும் மீட்பு பணிகள் நடந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கிய 10 தொழிலாளர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்தில் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில், 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். பாறைகள் மீண்டும் சரிந்து விழுந்ததால் மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் சனிக்கிழமை மாலை வரை 9பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 16 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
