இரண்டு தலை.. இரையாகும் ஒவ்வொரு எலி.. வைரல்!

Published:

snake 3 - 2026

இணைய உலகத்தில் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதிலும் ஆபத்தான பாம்பு, ராஜ நாகம் போன்ற பாம்புகளின் வீடியோக்கள் மிகவும் அதிகம்.

பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும் சில சமயம் திகிலாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள்.

இந்நிலையில், இரு தலைப் பாம்பின் வீடியோ ஒன்று சமூக ஊடக உலகில் மிகவும் வைரலாகியுள்ளது. பயங்கரமான தோற்றம் கொண்ட இரு தலைப் பாம்பு, இரு எலிகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் வீடியோ, சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வெளியான வீடியோவை பார்த்தால் அது பாம்பை வலர்க்கும் இடம் போல் தெரிகிறது. பாம்பு வீட்டின் உரிமையாளர் இரண்டு வெள்ளை மற்றும் பழுப்பு நிற எலிகளை வைத்த போது, சுமார் எட்டு அடி நீளமுள்ள இரண்டு முகம் கொண்ட பாம்பு தன் இரண்டு வாயாலும் அதைத் தாக்கியிருக்க கூடும் என்பதை, நாம் உணர்ந்து கொள்ளலாம்.

வீடியோவில் பாம்பு தனது இரு வாய்களாலும் ஒரே நேரத்தில் எலியை விழுங்குவதை காணலாம்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் snakebytestv என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது மில்லியன் கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது. சமூக ஊடக பயனர்களும் இதை மிகவும் ஆர்வமாக பார்க்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img