கேரளா விஸ்மயா தற்கொலை வழக்கு-கணவர் குற்றவாளி..

Published:

கேரளத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரதட்சணை கொடுமை காரணமாக 23 வயது கல்லூரி இறுதியாண்டு மாணவி விஸ்மயா தற்கொலை செய்து கொண்டது கேரளத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுளள்து. கிரண்குமாருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.விஸ்மயா மீது கணவரின் வரதட்சணை துன்புறுத்தலே, அவரை தற்கொலை வரை இட்டுச் சென்றதாக புகார் கூறப்பட்டு, கணவரின் கொடுமைக்குள்ளான, விஸ்மயா அனுப்பியதாக சில புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து கேரளத்தில் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டங்கள் அதிகரித்தன.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்மயா. ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது, கிரண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.திருமணத்தின்போது 100 சவரன் நகை, டொயாட்டா கார், நிலம் என ஏராளமான வரதட்சணையை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். ஆனாலும் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டில் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது. வரதட்சணை கேட்டு கணவர் அடித்துத் துன்புறுத்தியதால், மன வேதனையில் இருந்த விஸ்மயா, கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்ததும், விஸ்மயாவின் பெற்றோர், காவல்நிலையத்தில் கிரண்குமார் மீது புகார் அளித்தனர். வழக்கை தீவிரமாக விசாரித்த காவல்துறையினர், வரதட்சணை கொடுமையால்தான் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக கிரண்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

வழக்கு விசாரணை நிறைவடைந்து, இன்று விஸ்மயா தற்கொலையில் வழக்கில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண் குமார் குற்றவாளி என கூறி உள்ளது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்டும் என கோர்ட் அறிவித்து உள்ளது.

images 37 2 - 2026
703316 vismaya case - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img