வாடிக்கையாளர்களே ஒரு போதும் இதை செய்யாதீர்கள்..: SBI எச்சரிக்கை!

sbi - 2026

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு உங்கள் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என போலியாக எஸ்.எம்.எஸ் வருவது குறித்து மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கிகளிலிருந்து போலியாக அழைப்பது போன்று வாடிக்கையாளர்களிடம் ஒரு முறை கடவுச்சொல்லை பெற்று, மோசடிகளை நடைபெற்று வருவது குறித்து அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இப்போது புதிதாக வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு மோசடி நடைபெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

“உங்கள் எஸ்பிஐ கணக்கு முடக்கப்பட்டுள்ளது” என வரும் எஸ்.எம்.எஸ் போலியானது. அது போன்ற மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் உங்களுக்கு வந்தால் அதை நிராகரிக்கவும்.

உடனே வங்கி நிர்வாகத்திடம் புகார் அளிக்கவும். phishing@sbi.co.in என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேலை உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி நபர்களால் எடுக்கப்பட்டதாகச் சந்தேகம் இருந்தாலும், உடனே வங்கியில் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இந்திய ரிசர்வ் வங்கி போலி எஸ்.எம்.எஸ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய குறுஞ் செய்திகளில், “தேடுபொறி இணையதளங்களில் உள்ள பட்டியலிடப்பட்டுள்ள போலி வாடிக்கையாளர் சேவை எண்கள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சரியான தொடர்பு விவரங்களுக்கு எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை எப்போதும் பார்வையிடவும்” என் தெரிவித்துள்ளது.

டிவிட்டரில், “எஸ்எம்எஸ் மோசடிக்கு வழிவகுக்கும், மேலும் உங்கள் சேமிப்பை இழக்க நேரிடும். அதில் வரும் இணைப்புகளை கிளிக் செய்ய கூடாது. எஸ்.எம்.எஸ்-ல் இணைப்புகள் வரும் போது அதில் சரியான இணைப்புகள் இருக்கின்றனவா என சரி பாருங்கள். விழிப்புடன் இருங்கள் #SafeWithSBI” என தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி ஒரு வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்கள் விவரங்களைக் கேட்காது. உங்கள் பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட தகவலைக் கேட்டு உங்களுக்கு மின்னஞ்சல் வந்தால் உடனடியாக புகாரளிக்கவும். இது ஒரு மோசடி மின்னஞ்சலாக இருக்கலாம் எனவும் எஸ்பிஐ கூறியுள்ளது.

யாராவது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுத்திருந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவுறுத்துகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

உங்கள் வங்கிக்கு நீங்கள் தெரிவிக்கும் போது, உறுதிசெய்தலைப் பெற மறக்காதீர்கள். உங்கள் புகாரைத் தீர்க்க வங்கிக்கு ரசீது தேதியிலிருந்து 90 நாட்கள் உள்ளன. உங்கள் கடவுச்சொல், பின் அல்லது OTP போன்ற உங்களின் அலட்சியத்தால் பரிவர்த்தனை நடந்திருந்தால், உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கும் வரை இழப்புக்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் வங்கிக்குத் தெரிவித்த பிறகும் மோசடியான பரிவர்த்தனைகள் தொடர்ந்தால், அந்த நிதியை உங்கள் வங்கி உங்களுக்குத் திருப்பித் தர வேண்டும். நீங்கள் அறிக்கையிடலை ஒத்திவைத்தால் உங்கள் இழப்பு அதிகரிக்கும்.

மோசடியான பரிவர்த்தனையை நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும் அல்லது மேலும் தகவலுக்கு 14440 என்ற எண்ணை அழைக்கவும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒருவேலைத் தவறுதலாக இது போன்றவற்றில் உங்கள் விவரங்களை அளித்திருந்தால் உடனே உடனே உங்கள் கடவுச்சொற்களை மாற்றவும்” என்று எஸ்பிஐ இணையதளம் குறிப்பிடுகிறது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories