சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோவுக்கு 35 ரூபாய் குறைந்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் இன்று ஒரு கிலோ தக்காளி 65 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை பாதியாக குறைந்தது. அண்மைக்காலமாக தக்காளி விலை உயர்ந்த நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை அண்மையில் கிலோ ரூ.120ஐ தொட்ட நிலையில் தற்போது பாதியாக குறைந்தது. தக்காளி விலை வரும் காலங்களில் மேலும் குறையும் என வியாபாரிகள் கருத்து
உழவர் சந்தை உட்பட சந்தைகளில் தக்காளியின் விலை நேற்று கிலோ ரூ.90க்கு விற்பனையானது.இன்று விலை சரிவடைந்துள்ளது.
