pm cm1 - 2026

தமிழ்நாட்டிற்கு நான் வருவது எப்போதுமே மிக அருமையான பயணமாக இருக்கும்-சென்னையில் பிரதமர் மோடி..

சற்றுமுன்

தமிழ்நாட்டிற்கு நான் வருவது எப்போதுமே மிக அருமையான பயணமாக இருக்கும். இது மிகவும் சிறப்பான பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி சிறப்பானவை என
இன்று சென்னையில் ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

சென்னையில் ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவின் தொடக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசியபோது தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றார்.

இதன்பிறகு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், திராவிட மாடல் குறித்த விளக்கம், கட்சத்தீவை மீட்பது, நீட் தேர்வு ரத்து மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொன்றாகத் தொடக்கி வைத்தார்.இதன்பிறகு, பிரதமர் மோடி பேசியதாவது,

ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள், சகோதர, சகோதரிகளே வணக்கம். மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதுமே மிக அருமையாக இருக்கும். இது மிகவும் சிறப்பான பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி சிறப்பானவை.

பாரதியார், செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியிருக்கிறார்.ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டிலிருந்து வரும் எவரேனும் ஒருவர் எப்போதுமே தலைசிறந்தவராக செயல்படுகிறார். சமீபத்தில் இந்திய காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் குழுவிடம் பேசினேன். இந்த முறை ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது.

இதில் இந்தியா வென்ற 16 பதக்கங்களில், 6 பதக்கங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் பங்களிப்பு உள்ளது.
தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது

சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்றார் பிரதமர் மோடி.

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், மத்திய இணையமைச்சர் எல். முருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். 

சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு தளத்துக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

pm cm1 - 2026
pm stalin - 2026
PM Modi 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.