December 7, 2025, 11:52 PM
24.6 C
Chennai

பிரக்ஞானந்தாவை அழைத்து வேலை கொடுத்த நிறுவனம்!

kamadenu 2022 05 9d7cd5ec 1dd4 45d7 a2c4 991d3a9eed7c Praggnanandhaa2 - 2025

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பெற்றார்.

இறுதிப்போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான டிங் லிரனிடம் டை பிரேக்கர் முறையில் நடந்த ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.

லீக் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சனையும், காலிறுதியில் சீன வீரர் வீ ஒயையும் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.

அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. அதுமட்டுமல்லாமல் மெல்ட்வாட்டர் சாம்பியன் செஸ் போட்டிக்கு இறுதிப்போட்டிவரை முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.

இந்நிலையில் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலகின் 2ம் நிலை வீரரான டிங் லிரனை எதிர்கொண்டார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.

முதல் கேமை பிரக்ஞானந்தா இழந்தபோதிலும் 2-வது கேமில் வெற்றி பெற்று டிங் லிரனுக்கு நெருக்கடி கொடுத்தார்.

வெற்றியாளரை முடிவு செய்யும் 3வது கேம் இருவருக்கும் இடையே கடும் போட்டியாக அமைந்தது. இறுதியில் டைபிரேக்கர் முறையில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார் டிங் லிரன்

சென்னையைச் சேர்ந்தவரும் இந்திய கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தா முதல் செட்டை 1.5-2.5 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். ஆனால், 2-வது செட்டில் 2.5-1.5 என்று டிங் லிரனுக்கு அதிர்ச்சி அளித்து 79 நகர்த்தல்களில் வென்றார்.

3-வது செட் இருவருக்கும் இடையே கடும் போட்டியாக இருந்து 106 நகர்த்தல்கள் வரை சென்றது. இறுதியில் டைபிரேக்கரில் சீன வீரர் டிங் லிரன் வெற்றியாளராகினார்.

தமிழக வீரர் பிரக்ஞானந்தா ரமேஷ்பாபுவின் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “

indian oil - 2025

பிரக்ஞானந்தா மற்றும் கொசுக்களை வென்றதாக டிங்கிற்கு வாழ்த்துகள். பிரக்ஞாவை நினைத்து பெருமைப்படுகிறேன்.

அனைத்து சூழல்களிலும் தனது போராட்டத்தை வெளிப்படுத்தியது பெருமைக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்

அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. அதுமட்டுமல்லாமல் மெல்ட்வாட்டர் சாம்பியன் செஸ் போட்டிக்கு இறுதிப்போட்டிவரை முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.

மேலும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் தொடங்கும் ஒலிம்பியாட் செஸ் போட்டியிலும் பிரக்ஞானந்தா பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

சென்னையை சேர்ந்த இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது.

சமீபத்தில் நடந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விழாவில் இந்த வேலை வாய்ப்புக்கான ஒப்பந்தம் கடிதம் பிரக்ஞானந்தாவுக்கு முறைப்படி வழங்கப்பட்டது.

இருப்பினும் 16 வயதேயான பிரக்ஞானந்தா 18 வயது முடிந்ததும் பணியில் சேர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரக்ஞானந்தாவின் சம்பளம் குறித்த தகவல் வெளிவரவில்லை என்றாலும் ஆண்டுக்கு 7 இலக்க எண்களில் அவருடைய சம்பளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pragyananda - 2025

இந்த விழாவில் பேசிய பிரக்ஞானந்தா, ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் எனக்கு கிடைத்த இந்த பதவி மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இருக்கும் பல செஸ் வீரர்களை எனக்கு தெரியும் என்றும் அவர்களும் எனக்கு வேலை கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் கூறினார்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இணைந்தது மிகப்பெரிய பெருமை என்றும் எனது வாழ்க்கையில் இந்த பணி மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வைத்யா இந்த விழாவில் பேசிய போது ‘இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மிகச்சிறந்த வகையில் செயல்பட்டு வருகிறது என்றும், அந்த வகையில் பிரக்ஞானந்தா வேலை வாய்ப்பு கொடுத்ததை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories