இதுவரை இல்லாத அளவு ஒரே மாதத்தில் இராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை..!

rameshwaram kovil - 2026

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 13 நாட்கள் உண்டியல் பணம் எண்ணப்பட்டதில் காணிக்கையாக 1.34 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாதத்தில் 2.99 கோடி ரூபாய் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமிகள் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில், நம்புநாயகி அம்மன் கோவில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் மூலம் செலுத்தப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மூலம் கைப்பற்றி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

இக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல் வருவாய் எண்ணப்படுவது வழக்கம். ஆனால் நடப்பு மாதம் கோயில் நிர்வாகம் மூலம் பக்தர்களின் காணிக்கை பெறுவதில் முறைபடுத்துதல் போன்ற பணிகள் காரணமாக உண்டியல் வருவாய் அதிகரித்துள்ளது.

rameshwaram - 2026

இந்த மாதம் கடந்த 11 ஆம் தேதி உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ 1 கோடியே 65 லட்சத்து 29 ஆயிரத்து 704 ரூபாயும்,தங்கம் 104 கிராம், வெள்ளி 2 கிலோ 835 கிராம் பக்தர்கள் காணிக்கை மூலம் கிடைக்கப்பெற்றது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அதே போல கடந்த 24 ஆம் தேதி இரண்டாவது முறையாக 13 நாட்கள் கழித்து உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ 1 கோடியே 34 லட்சத்து,47 ஆயிரத்து 439 ரூபாய், தங்கம் 116 கிராம்,வெள்ளி ஒரு கிலோ 560 கிராம் கிடைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்.

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாதத்தில் ரூ 2 கோடியே,99 லட்சத்து 77 ஆயிரத்து 143 ரூபாயும், தங்கம் 220 கிராம், வெள்ளி 4 கிலோ 395 கிராம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories