டெல்லியில் நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை..!?

டெல்லியில் நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சகர்ட் பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அசோக் பெனிவால். இவர் தனது 42 வயதுடைய மனைவியுடன் சகர்ட் பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையில், நீதிபதி அசோக்கின் மனைவி நேற்று காலை 11 மணியளவில் மார்க்கெட்டிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த நீதிபதி அசோக் தனது மனைவியை காணவில்லை என இரவு 10 மணியளவில் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அந்த பெண் ஒரு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பயணியை ராஜ்பூர் பகுதியில் இறக்கிவிட்டது தெரியவந்தது. அந்த பகுதியில் தான் அந்த பெண்ணின் சகோதரன் வீடு உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசாருடன் நீதிபதி அசோக், ராஜ்பூருக்கு சென்று அந்த பெண்ணின் சகோதரன் வீட்டிற்கு சென்றார்.

வீட்டின் மேல் தளத்தில் பெண்ணின் சகோதரன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் கீழ் தளத்தில் உள்ள அறைகள் பூட்டப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் பூட்டப்பட்டிருந்த ஒரு அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நீதிபதி அசோக்கின் மனைவி தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் அசோக்கின் மனைவி எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 70 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories