நேபாளத்தில் விமானம் விபத்தில் சிக்கியதில் இதுவரை 14 உடல்கள் மீட்பு..

நேபாளத்தில் 4 இந்தியர்களுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் யாரும் உயிர் பிழைத்ததாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் தாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது. விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. விமானத்தின் சிக்னல், விமானியின் மொபைல் போன் சிக்னல் உள்ளிட்டவற்றை கொண்டு விமானம் விபத்துக்குள்ளானதா? விமானத்தின் நிலை என்ன? என்பது குறித்து மலைப்பகுதியில் நேபாள ராணுவம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், மாயமான விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடந்துள்ளன. இதனை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவை காத்மண்டுவுக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ பகுதியில், நேபாள ராணுவ வீரர்கள் 15 பேர் அடங்கிய குழு உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. விபத்து பகுதி 14,500 அடி உயரத்தில் உள்ளது. ராணுவ குழு 11 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளது என நேபாள ராணுவம் அதெரிவித்து உள்ளது. இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பதீந்திரா மணி பொக்ரெல் கூறும்போது, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்து இருக்க கூடும் என சந்தேகிக்கிறோம். இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என தொடக்க கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

IMG 20220530 135136 294 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories