சென்னையில் போதை பொருள் விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது..

சென்னையில் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் எடுத்து போதை பொருள் விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மஹாலில் அனுமதி இல்லாமல் டி.ஜே நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர் அதிக அளவு போதை மருந்து உபயோகித்ததால் உயிரிழந்தார்.

இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் ஊழியர்கள் உட்பட 6 பேரை கைது செய்த நிலையில் இந்த வணிக வளாகம் அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக திருமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.அப்போது அவர் முறையாக பதில் அளிக்காததால் அவரை சோதனை செய்ததில் போதை மாத்திரை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) என்பது தெரிய வந்தது.மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் சாகுல் ஹமீத் (21),கோடம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் டோக்கஸ் (24) ஆகியோர் போதை மாத்திரை மற்றும் ஸ்டாம்புகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் எடுத்து நேரில் வரவழைத்து விற்பனை செய்துள்ளனர். இவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள போதை பொருள்கள், ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

713273 08 chennai 30 05 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories