IMG 20220520 WA0120 1 - 2026

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து  குறைவு..

சற்றுமுன்

மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து  குறைந்ததுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த 24-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைய தொடங்கியது. அதே சமயம் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு வரும் நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 117.02 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 116.59 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 2,770 கன அடியாக குறைந்ததுள்ள நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 88.13 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
IMG 20220520 WA0120 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.