
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 25 பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்பாக்கத்தில் செயல்பட்டுவரும் அணுமின் நிலையத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடிந்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் என்னென்ன பணியிடங்கள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
கல்பாக்கம் அணுமின் நிலையப்பணிக்கானத் தகுதிகள்
காலிப்பணியிட விபரங்கள்:
மெடிக்கல் ஆபிசர் – 6
டெக்னிக்கல் ஆபிசர் – 1
செவிலியர் – 5
சயின்டிபிக் அசிஸ்டென்ட்- 7
பார்மசிஸ்ட் -1
டெக்னீசியன் – 5
கல்வித்தகுதி – மேற்கண்ட பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு – 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை- மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், www.igcar.gov.in/gso அல்லது www.igcar.gov.in என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக வருகின்ற ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி -Assistant personnel officer ( Rectt), General service organisation, Kalpakkam – 603102.
மேலும் இப்பணியிடங்கள் குறித்த கூடுதல் விபரங்களை, http://www.igcar.gov.in/gso/recruitment/Advt01_2022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்..